சனி, 22 ஜூலை, 2017

எண்சீர் விருத்தத்திற்கான மெட்டும் இசையும்!


நான் ஒரு வெறும் குளியலறைப் பாடகன். எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது. பொழுதுபோகாத நேரங்களில் நீண்ட கால முயற்சியினால் சிறிது சிறிதாகக் கோர்க்கப்பட்ட இசை இது. முழுக்கவே தாளக் கருவிகள் சார்ந்த இசை வளையங்களையே (music loops) பயன்படுத்தியுள்ளேன்.




(சித்தர் பாடல்கள் பெரும்பாலும் காய் காய் மா தேமா, காய் காய் மா தேமா என்னும் இந்த பா அமைப்பையே பெற்றிருப்பதால், அவைகளையும் இதே மெட்டில் பாடலாம்.)

This is completely home-made in my laptop. So there are few glitches here and there. Especially in vocal recording.
பாடல் வரிகள்:
கடல்தனிலே மிதக்கின்ற கப்பல் உள்ளே
***கடல்நீரும் நுழையாமல் காத்து நின்றால்;
கடல்தனிலே மூழ்காதே கப்பல் தானும்,
***கவிழ்ந்திடுமே துளையிருந்து கடல்நீர் புக்கில்;
கடலளவு சிக்கல்கள் சூழ்ந்தும் வாழ்க்கை
***கவிழாதே மனத்தெளிவைக் காத்து நின்றால்;
கடகடத்து மனம்புகுந்து கலங்கி நின்றால்
***கைக்கெட்டும் கனவுகூட கைகூ டாதே!



கருத்துகள் இல்லை: