வெள்ளி, 12 ஜனவரி, 2007

பதினாறு பேறுகள் என்னென்ன?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தக் கேள்விப் பட்டிருப்போம். சிலர் இதன் பொருள் புரியாமல், புதிதாக மணமானவர்களை வாழ்த்தும்போது 'பதினாறெல்லாம் வேண்டாம், ரெண்டு மட்டும் பெற்றுக்கொண்டால் போதும்' என்று காமடி செய்வார்கள். பதினாறு என்பது பதினாறு பேறுகளைக் குறிக்கிறது. அந்த பதினாறு பேறுகள் இவைகள்தாம்:

1. புகழ், celebrity;
2. கல்வி, learning;
3. வலிமை, power, physical strength;
4. வெற்றி, victory, success;
5. நன்மக்கள், good children;
6. பொன். gold;
7. நெல், abundance of rice and other grain;
8. நல்லூழ், a favorable destiny;
9. நுகர்ச்சி, proper and unsullied enjoyment;
10. அறிவு, wisdom;
11. அழகு, beauty;
12. பெருமை, greatness, magnanimity;
13. இளமை, youthfulness;
14. துணிவு, courage;
15. நோயின்மை, perfect health;
16. நீண்ட வாழ்நாள், longevity.

பதினாறு பேறுகளையும் உள்ளடக்கிய வாழ்த்துப்பா:

கட்டளைக் கலித்துறை

தேர்ந்தநற் கல்வியும் தீரமும் பொன்புகழ் திண்துணிவும்
கூர்ந்தநெற் கூலமும் கூடும் இளமையுங் கூரறிவு(ம்)
மார்ந்தபல் வெற்றியும் மாண்பு மழகும்நன் மக்கட்பேறும்
நேர்ந்தநல் லூழொடும் தேகந்துய்ப் போடும்நீ நீடுவாழே!

கருத்துகள் இல்லை: