வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

தற்கால இயற்பியலாளனின் தாலாட்டு!


எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் இணைந்து ஃபோட்டான் உருவாகும் நிகழ்ச்சியையும், அந்த நிகழ்வில் ஆற்றல் அழிவின்மை விதியையும்  நிலா நிலா ஓடி வா , Twinkle Twinkle Little Star மெட்டில் குழந்தைப் பாடலாகக் கொடுக்க முயன்றுள்ளேன்.

எலக்ட்ரான் எலக்ட்ரான் எலக்ட்ரானே
எதிர்மின் னூட்ட எலக்ட்ரானே
நேர்மின் னூட்டம் கண்டாலே
சேர்ந்தே இருக்கச் செல்வாயே
பாசிட் ரானைப் பார்த்தாலே
பாசத் தோடே பாய்வாயே
நேசத் தோடே தொட்டவுடன்
நீடித் திருக்க மாட்டாமல்
பாசிட் ரானுடன் நீயுமங்கே
ஃபோட்டான் ஆகிப் போவாயே
ஃபோட்டான் ஆகிப் போனாலும்
மாற்றம் ஏதுங்கள் ஆற்றலுக்கே?



இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு:

Electron, electron, O electron!
O negatively charged electron!
If you see a positive charge
You go forth to be united with it!
If you see a positron
Passionately you shoot forward.
Once you touch it affectionately,
Being unable to be you any longer,
Along with the positron, there
You become a photon and begone.
Though you become a photon and begone,
What is the change in the energy of you two?

2 கருத்துகள்:

VOICE OF INDIAN சொன்னது…

supperb

முத்து நாடார் சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, திரு. பாலசுப்ரமணியன்!